” இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது” என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள்களுக்கு தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் .
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் , பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷண் சிங், தான் தலைவராக பதவிவகித்த 2012 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் 18 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவர் உட்பட 10 கும் மேற்பட்ட பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர்மீது புகார் எழுந்தது . அவரைக் கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் , எனக் கோரி கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் முதல் பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் வேலையில் , இந்த குற்றசாட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நரசிம்ஹா மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யும்படி நீதிபதிகள் வலியுறுத்தியதை அடுத்து , குற்றவாளி பிரிஜ் பூஷண் சிங் மீது போக்ஸோ உற்பட பல பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

இருப்பினும் பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்று மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸை சேர்ந்த பிரியங்கா காந்தி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் நேற்று கலந்து கொண்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
இந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் பாதிக்கப்பட்ட பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தனதுஆதரவை தெரிவித்துள்ளார் .
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!” என்று நேற்று பதிவு செய்திருக்கிறார் .
இந்த சூழ்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங்கை , வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி காவல்துறை சார்பில் இரண்டு சம்மன்கள் அனுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .