தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின…

3 Min Read
மாணவர்கள்

இந்த ஆண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 % சதவீதம் மாணவிகளும், 88 %  மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

- Advertisement -
Ad imageAd image

10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் ஐந்து  இடங்களை பிடித்த மாவட்டங்கள் கீழ்குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் – 98 %

சிவகங்கை – 97 %

விருதுநகர் – 96%

கன்னியாகுமரி – 95 %

தூத்துக்குடி – 94%

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி . தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வை 8,35,600 பேர் இந்தாண்டு தேர்வு எழுதியிருந்தனர். அதில் மாணவர்கள் 4,04,900, மாணவிகள் 4,30,700 தேர்வு எழுதயிருந்தனர்.

கணிதத்தில் 3,649 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்

அறிவியல் பாடத்தில் 3,584 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்

சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்தனர்

தேர்வு எழுதிய 9.14 லட்சம் பேரில் 89 மாணவர்கள் ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெற்றனர்

பத்தாம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தில் ஒருவர் கூட 100 மதிப்பெண் பெறவில்லை

தேர்வு எழுதிய 10,808 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றனர்

மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.77%

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர்

1,026 அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45%

ஆங்கில மொழிப் பாடத்தில் 98.93% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்

100% மதிப்பெண் பெறாத போதிலும் தமிழ் பாடத்தில் 95.55% மாணவர்கள் தேர்ச்சி

கணிதப் பாடத்தில் 95.54% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

அறிவியல் பாடத்தில் 95.75% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்

சமூக அறிவியல் பாடத்தில் 95.83% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்

புதுச்சேரி மாநிலத்தில் 89.12% மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

இதில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 மதிப்பெண், ஒரு 2 மதிப்பெண் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், பின்னர் 19ம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

மாணவர்கள்

இந்நிலையில் மே 19ம் தேதி இன்றே 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகின்றன.

வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த தேர்வு முடிவுகளை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவார். ஆனால், இன்று வெளியாகும் தேர்வு முடிவுகள் இயக்குனரகத்திலேயே வெளியிடப்படுவதால், செய்தியாளர்கள் சந்திப்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவையான விவரங்கள்  https://dge.tn.nic.in என்ற முகவரியில் அந்தந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் வேளையில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணிக்கும், www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற முகவரிகளிலும் தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழி படிவங்களில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Share This Article
Leave a review