புதுச்சேரி சிறுமி உடலுக்கு எதிர்ப்பை மீறி அஞ்சலி செலுத்திய தமிழிசை

1 Min Read
தமிழிசை

சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக பெண்கள் பொது மக்கள் முழக்கம் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வேறு வழியாக ஆளுநர் தமிழிசை திரும்பி சென்றார்.
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலட வலியுறுத்தியும், புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி வழங்க அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல், தொந்தரவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவரும் கூட்டு சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது உயிரிழந்தார். இதனிடையே நேற்று சிறுமியின் உடல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர்.

கூட்டத்தில் தமிழிசை

உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில் சிறுமையின் உடல் அவர்கள் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது அப்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுமியின் இல்லத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வருகை தந்திருந்தார் இப்போது பொதுமக்கள் பெண்கள் என தமிழிசைக்கும் புதுவை அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆளுநர் வந்த வழியே திரும்பி செல்லாமல் வேறு வழியாக திரும்பி சென்றார்.பொதுமக்கள்,உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.

Share This Article
Leave a review