இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும் – முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி..!

3 Min Read

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடைவதில் தமிழ்நாடுக்கு முக்கியப் பங்கும் இருக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ நேற்று தொடங்கி வைத்துள்ளார். இப்போது அவர் உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளது என கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாசார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். தொழில்மயமாக்கல் வரலாற்றில், ஒரு மகத்தான அத்தியாயமாக இந்த மாநாடு இருக்கப் போகின்றது. 2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று லட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம் இருக்க வேண்டும் என்கிறார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

அதேபோல் அங்கு சட்டம் – ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவ வேண்டும். ஆட்சியாளர்கள் மேல் உயர்மதிப்பு இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவியப்பட்டு வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்குகின்ற வகையில், 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியம். அதனால் தான் தொழில் திட்டங்கள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே தங்களுடைய தொழில் திட்டங்களை அமைத்துயிருக்கும் பல நிறுவனங்கள், தங்களுடைய திட்டங்களை நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது, தான் தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் சூழலுக்கான சாட்சி. மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான, ஹூண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பலமடங்கு அதிகரித்துள்ளன.

130-க்கும் மேற்பட்ட “அதிர்ஷ்டம் 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருப்பது. தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்திருப்பதற்கு இது ஒரு சான்று. முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிக்கிறது. உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள்.

மாநாட்டில் எடுத்த புகைப்படம்

முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் திறமையான பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது. மூலதனம் நிறைந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும், மின்சார வாகனங்கள், சோலார் பிவி செல்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளையும், ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள் என்றார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனவை நனவாக்குவோம், என மனதார அழைப்பு விடுக்கிறேன். இந்த மாநாட்டினால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளரும். அதன்மூலமாக இந்தியப் பொருளாதாரமும் உயரும். அன்புக்குரிய முதலீட்டாளர்களே, இந்த உலகத்தின் பல நாடுகளிலிருந்து, அமைதியில் சிறந்த, முதலீட்டாளர்களின் நண்பனாக திகழுகிற தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வந்து இருக்கிறீர்கள்.

என் தலைமையிலான தமிழ்நாடு அரசு, உங்களுக்கு அனைத்து வகையிலும், உறுதுணையாக இருக்கும். உங்களுடைய உணர்வுகளை மதிக்கிறோம். தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்வோம். ஏனென்றால்,“சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்” என்ற ஆட்சி நடத்துகின்ற திராவிட மாடல் அரசு. வாருங்கள்.. முதலீடு செய்யுங்கள்.. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் உங்கள் பங்களிப்பை தாராளமாக வழங்குங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன் என்று முதல்வர் அழைப்பு விடுத்து பேசினார்.

Share This Article
Leave a review