நீட் தேர்வில் தமிழக (செஞ்சி -விழுப்புரம் மாவட்டம்)மாணவர் பிரபஞ்சன் முதலிடம்!

1 Min Read
பிரபஞ்சன்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெற்றது. நீட் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்தத் தேர்வில்  தமிழ்நாட்டை (செஞ்சி)சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போராவருண்சக்கரவர்த்திஆகியோர் 99.9% மதிப்பெண் பெற்று கூட்டாக தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர்.

இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நெகனூர் அரசு மேல் நிலைப் பள்ளி கணித ஆசிரியை  இரா. மாலா  ,மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷ்  இவர்களின் புதல்வன் பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு  முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்

முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள்.தமிழ்நாட்டில் 1,44,516 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

Share This Article
Leave a review