நமோ செயலியில் தமிழகம் 3-வது இடம் – அண்ணாமலை வாழ்த்து

0
46
அண்ணாமலை வாழ்த்து

நமோ செயலியில் தமிழகம்  3-வது இடம் பிடித்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”நாடு முழுவதும் மாநிலங்களிடையே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வில், நமோ செயலியில் இந்திய அளவில், தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

அண்ணாமலை வாழ்த்து

தமிழகத்தில், 5000 பயனாளிகளுக்கு மேல், புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்த பாஜக மகளிரணியினரைச் சந்தித்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக அளவில், ஐந்தாயிரம் பயனாளிகளுக்கு மேல் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்த பாஜக சகோதர சகோதரிகள் 13 பேரில், 11 பேர், கோவை பெருங்கோட்ட மகளிரணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

இந்த நிகழ்வினை அகில இந்திய அளவில் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி வரும் பாஜக மஹிளா மோர்ச்சா தேசியத் தலைவி வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்திலிருந்து பெருவாரியான வெற்றியாளர்களைப் பெற்றுத்தந்த கோவை பெருங்கோட்டப் பொறுப்பாளர் முருகானந்தத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here