கேலோ இந்தியா கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்..!

2 Min Read

6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி பதக்கங்களை குவித்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டில் இன்று கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி எதிராக விளையாடி தமிழ்நாடு அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. இன்று நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில், தமிழக ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.

கூடைபந்து விளையாடினர்

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 85 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு அணி 86 புள்ளிகள் பெற்று வெற்றியை தட்டிச் சென்றது. மகளிர் பிரிவு இறுதி சுற்றுப் போட்டியில், தமிழ்நாடு மகளிர் கூடைப்பந்தாட்ட அணி பஞ்சாப் அணியோடு மோதியது. இதில் பஞ்சாப் அணி 66 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு அணி 70 புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்தது.

ஆடவர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்காக பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம் அணிகள் மோதின. இதில் 76 புள்ளிகள் பெற்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதேபோல், மகளிர் பிரிவில் மத்திய பிரதேசத்தோடு மோதிய மகாராஷ்டிரா அணி, 90 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. பின்னர் வெற்றி பெற்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு தங்க பதக்கம் மற்றும் கோப்பையை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

தங்க பதக்கம் மற்றும் கோப்பையை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் அருணா, ரகு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குனர் சீனிவாஸ் மளேக்கர், இந்திய கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் தொழில்நுட்ப ஆணையத் தலைவர் நார்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a review