தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால், பிற மாநிலத்தில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புவதை பாதுகாப்பாக உணர்கின்றனர். என தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார். நேரு யுவகேந்திரா சார்பில் 15-வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள அரசு இளையோர் விடுதியில் நேற்று தொடங்கியது.
மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரங்கள் விளையாட்டு அமைச்சகம் மற்றும் சென்னை நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் நடக்கும் 15 ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை நேற்று சென்னையில் கவர்னர் ரவி துவங்கி வைத்து, அவர் பேசியதாவது; உங்கள் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் அவசியம். தமிழகத்தில் இருந்து செல்லும் முன் (வணக்கம், நன்றி) உள்ளிட்ட சில வார்த்தைகளை தெரிந்து செல்லுங்கள். பழங்குடியினர் மேம்படும் போது இந்தியாவும் மேம்படும்.

பழங்குடியினர் உயர்ந்த பதவிகளை பெறும் வகையில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்மொழி மிக பழமையானது. இந்த விழாவில் ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கும் நீங்கள் இங்கிருந்து செல்லும்போது குறைந்தபட்சம் 12 தமிழ் வாக்கியங்களையாவது கற்றுக்கொள்ள வேண்டும்.பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. தமிழக கலாசாரம், உணவு வகைகளை நீங்கள் அறிந்து கொள்ள இந்த விழா ஒரு வாய்ப்பாக இருக்கும்.

சென்னை சுற்றி பாருங்கள். இங்கு உள்ள மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து அனுபவம் பெறுங்கள். இந்தியாவில் தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. இதனால் பிற மாநிலத்தில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை தமிழக அனுப்புவதை பாதுகாப்பாக உணர்கின்றன. இங்கு பழகும் நண்பர்களுடன், கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளுங்கள். இயற்கை பாதுகாப்பது குறித்து, நாட்டு மக்கள் பழங்குடி இனரிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர் இவ்வாறு கவர்னர் பேசினார். பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 220 பழங்குடியின மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பரிமாற்ற நிகழ்ச்சி, 28 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.