லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!ரசிகர்கள் கொண்டாட்டம்.

2 Min Read
லியோ

தமிழ்திரையுலகில் நடிகர் விஜய்க்கு தனி இடம் உண்டு.இலைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டம் கொண்டவர் நடிகர் விஜய்.அவருடைய பல படங்கள் வெற்றிப்படங்களாக்கிய பெருமை அவருடைய ரசிகர்களுக்கு உண்டு.தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

- Advertisement -
Ad imageAd image

அந்த வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இருக்காது என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

தினமும் 5 காட்சிகளை திரையிட தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை காட்சி கண்டிப்பாக இருக்கும் என தெரிகிறது. அதன் டைமிங் உள்ளிட்ட விபரங்களை விரைவில் தியேட்டர்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்

லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ உலகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை வரும் அக்டோபர் 19ம் தேதி முதல் பண்டிகை நாட்களை முன்னிட்டு வெளியிட உள்ளதால் தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளது. அதில், லியோ படம் வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதியும், 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவை விசாரித்து பார்த்த வருவாய் துறை அதிகாரி ஒட்டுமொத்தமாக அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் 5 சிறப்பு காட்சிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அக்டோபர் 19ம் தேதி முதல் காட்சி 4 மணிக்கு வெளியாகுமா? அல்லது காலை 7 மணிக்கு வெளியாகுமா? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால், 7 மணிக்கு லியோ திரைப்படம் வெளியாவது உறுதியாகி உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் படத்துக்கே அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குத் தான் முதல் காட்சி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்

லியோ படத்தில் வரும் வசனங்கள் குறித்து சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் விஜய் படத்திற்கு சிறப்பு காட்சிகள் வழங்கியது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.படம் வெளிவந்ததும் தான் படத்தை பற்றிய விமர்சனங்கள் வெளியாகும்.விஜய் ரசிகர்கள் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறார்கள்.அண்ணன் யாரு தெரியுமா என்று.

Share This Article
Leave a review