முதல்வர் மு க ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஒன்பது நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகள் இழுப்பதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒன்பது நாள் பயணமாக ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்படுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார். அங்கு ஏழு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பங்கே இருக்கிறார். அதனை தொடர்ந்து வருகின்ற 31ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
இந்திய பொருளாதார வளர்ச்சியை வடிவமைக்க பங்காற்றிடும் விதமாக 2030 2031 நிதி ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்பட செய்வதற்கு ஒரு லட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது இந்த இலக்கினை அடைந்திட ரூபாய் 23 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை உயர்த்திடவும் 46 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் முன் முயற்சி எடுத்து வருகிறது.
இந்த நோக்கத்திற்காக தொழில்துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் மூலமாக 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை 225 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையிடப்பட்டு தமிழ்நாட்டில் துபாய் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4 லட்சத்து 12 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.