- தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பெயரை பி.ஆர்.பாண்டியன் பயன்படுத்தக் கூடாது, மாநிலத் தலைவர் பழனியப்பன் அறிவிப்பு
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில் நீண்ட ஆண்டுகளாக விவசாயிகள் சங்கம் இயங்கி வந்தது, இந்நிலையில் இச் சங்கத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு சங்கம் பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்டு தற்போது இயங்கி வருகிறது, இதனையடுத்து இச்சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களிடம் மாநில தலைவர் பழனியப்பன் கூறுகையில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் என்ற பெயரை பி.ஆர்.பாண்டியன் உள்பட இனிமேல் யாரும் பயன்படுத்தக் கூடாது, அவ்வாறு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக அரசு .ராசி மணலில் அணை கட்ட வேண்டும், வரும் அக்டோபர் 1ஆம் தேதி பயிர் காப்பீட்டு நிறுவனங்களை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினார்,இதில்
மாவட்ட செயலாளர் மணி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்
பேட்டி: பழனியப்பன்
மாநில தலைவர்