- திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சையது உசேன் (40). இவர் மீஞ்சூரில் காலணி மற்றும் பை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த 14ஆம் தேதி இரவு கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி கொண்டு தமது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் அதில் வந்த அடையாளம் தெரியாத நபர் சையத் உசேனிடம் தகராறு செய்து கல்லை கொண்டு பலமாக தாக்கியதாக கூறப்படும் நிலையில் சையத் உசேன் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து அடிதடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 2நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சையத் உசேன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருவரை பிடித்து மீஞ்சூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு கொலை வழக்கு பிரிவாக மாற்றப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதேச்சையாக நடைபெற்ற விபத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது முன்பகை காரணமாக திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டதா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கில் சந்தேகப்படும்படியான இரண்டு நபர்களை கைது செய்து நடத்தி வருகின்றனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/on-the-occasion-of-the-full-moon-of-the-month-of-puratasi-a-girivalam-was-held-early-today-and-they-performed-girivalam-for-a-distance-of-six-and-a-half-kilometers/
இது குறித்து தகவல் அறிந்த சையது உசேனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் இதில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து கலந்து சென்றனர். இரண்டு நாட்களில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காத பட்சத்தில் கிராம பொதுமக்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.