லால் சலாம் படப்பிடிப்பின் போது அண்ணாமலையாரை தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் .

2 Min Read
லால் சலாம் படப்பிடிப்பின் போது அண்ணாமலையாரை தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் .

திரைப்பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை  முடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிவரும் லால் சலாம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் .

- Advertisement -
Ad imageAd image

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 நாட்களாக திருவண்ணாமலை பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது .

நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சியில் படப்பிடிப்பை முடித்த லால் சலாம் படக்குழுவினர் , அடுத்த படப்பிடிப்பை திருவண்ணாமலையில் தொடருவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில்  இன்று காலை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் , உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் .

அவருக்கு அண்ணாமலை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு  , சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது .

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரசாதமும் நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது .மேலும் ரஜினிகாந்த் அவர்களின் வருகை பொதுமக்கள் மற்றும் , அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவியது .

ஆவாரை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் கூட தொடங்கினர் .

மேலும் அவர்களை கட்டுப்படுத்த திருவண்ணாமலை சுற்றுவட்டார காவல் நிவலயங்களிலிருந்து 50 கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் .

ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் , ரஜினி காந்த் தனது தரிசனத்தை அவசர அவர்சமாக முடித்துவிட்டு தனது காரில் புறப்பட்டு சென்றார் . இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது .

கடைசியாக கடந்த 2003 ம் ஆண்டில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை புரிந்த நடிகர் ரஜினிகாந்த் , அதன் பிறகு இன்று தான் மீண்டும் திருவண்ணாமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார் . நடிகராக மட்டும் இல்லாமல் , ஒரு சிறந்த ஆன்மிகவாதியாகவும் திகழும் ரஜினியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலையார் கோவிலின் மூத்த நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review