அயோத்தி குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய ஒளி: பின்னனியில் இருக்கும் தொழில்நுட்பம்

0
24

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பான இந்திய வானியற்பியல் நிறுவனம் (ஐ.ஐ.ஏ) அயோத்தியில் சூர்ய திலக் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது. சூரிய திலக் திட்டத்தின் கீழ், சித்திரை மாதத்தில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு ஸ்ரீ குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய ஒளி கொண்டு வரப்பட்டது. ஐ.ஐ.ஏ குழு சூரியனின் நிலை, வடிவமைப்பு மற்றும் ஒளிக்கதிர் அமைப்பின் தேர்வுமுறை ஆகியவற்றின் கணக்கீட்டை மேற்கொண்டு, தளத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை செய்தது.

கோயிலின் உச்சியில் இருந்து சூரிய ஒளியை சிலையின் நெற்றிக்கு கொண்டு வருவதற்கான ஆப்டோ-மெக்கானிக்கல் வடிவமைப்பையும் குழுவினர் மேற்கொண்டனர். போதுமான வெளிச்சம் விழும் வகையில் அமைப்பில் உள்ள கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களின் அளவு, வடிவம் மற்றும் இருப்பிடத்தை மதிப்பிட்டு, சுமார் 6 நிமிடங்களுக்கு சூரிய ஒளி சிலையின் நெற்றியில் படும்படி செய்தனர்.

அயோத்தி ராமர் நெற்றியில் விழுந்த சூரிய கதிர்கள் திலகம் – பக்தர்கள் பார்த்து பரவசம்

கோயில் இப்போது முழுமையாக முடிக்கப்படாததால், ஐ.ஐ.ஏ நிபுணர்கள் தற்போதுள்ள கட்டமைப்பிற்கு ஏற்ப வடிவமைப்பை மாற்றியமைத்து காட்சியை மேம்படுத்தினர். 4 கண்ணாடிகள் மற்றும் 2 லென்ஸ்கள் கொண்ட இந்த வடிவமைப்பு, 17 ஏப்ரல் 2024 அன்று சூர்ய திலக் திட்டத்திற்காக செயல்படுத்தப்பட்டது. தளத்தில், ஆப்டோ-மெக்கானிக்கல் அமைப்பை செயல்படுத்துவது சி.பி.ஆர்.ஐ- ஆல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனத்தை பெங்களூரில் உள்ள ஆப்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

4 கண்ணாடிகள் மற்றும் 4 லென்ஸ்கள் கொண்ட சூரிய திலக்கின் இறுதி வடிவமைப்பு, கோயில் முழுவதும் கட்டப்பட்டவுடன், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களை அவற்றின் நிரந்தர சாதனங்களில் வைப்பதன் மூலம் செயல்படுத்தப்படும். ராம நவமியின் காலண்டர் தேதியில் 1-2 நாட்கள் மாற்றம் இருந்தாலும் மேலே உள்ள வழிமுறை பின்பற்றப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேகம் அல்லது மழை காரணமாக சூரிய ஒளி இல்லாவிட்டால் இயந்திர நுட்பம் வேலை செய்யாது. ஒவ்வொரு ஆண்டும் ராம நவமிக்கு முன்பு முதல் கண்ணாடியை கைமுறையாக மாற்ற வேண்டும். ஹோல்டர்களில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ்கள் மற்றும் கண்ணாடிகள் அணுகக்கூடியவை என்பதால் அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here