கோவை வடவள்ளி அடுத்த வேம்பு அவன்யூ, குறிஞ்சி வீதியில் குடும்பத்தோடு வாடகைக்கு வீட்டில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்தார். ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி லக்ஷயா அப்பகுதியில் ஜே.டி என்ற டியூசன் சென்டர் நடத்தி வந்து உள்ளார். இவர்களது மகள் யக்க்ஷிதா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் ராஜேஷின் தாயார் பிரேமா (73) வசித்து வந்தார்.
இந்நிலையில் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி கடந்த நவம்பர் மாதம் முதல் சிறுக, சிறுக கடன் தொகையாக ரூபாய் 25 லட்சம் கொடுத்து உள்ளார். இதனால், ஜெயபாரதி, தனது நண்பரான தீபக்கை உடன் அழைத்து சென்று, ராஜேஷ் மற்றும் சுருதியிடம், தான் கொடுத்த பணத்தினை திரும்ப கேட்டு உள்ளார். இந்நிலையில், மேற்படி ராஜேஷ் தனது மனைவி ,மகள், மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்துவிட்டு பின்பு அவர் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து வடவள்ளி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவ இடத்தில் ஒரு கைபேசி மற்றும் தற்கொலைக்கு குறிப்பு சம்பந்தமான நோட்புக்கும் கிடைக்கப்பட்டு உள்ளது. அதில், ஜெயபாரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என, தீபக் கேட்டு உள்ளார், ஆனால் ஜெயபாரத் அவகாசம் கொடுக்க மறுத்ததின் காரணத்தினால் மன உளைச்சல் ஏற்படுத்தியதே இறப்புக்கு காரணம் என குறிப்பிட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜெயபாரதி மற்றும் தீபக் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.