கோவையை சோலையாக்கும் முயற்சியாக 25 லட்சம் விதைப்பந்து தயாரிக்கும் பணிகளை 3060 மாணவர்கள் இணைந்து செய்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாகவும்,அதே நேரத்தில் மரங்களை அதிகமாக்கும் நோக்கத்தில் கோவையில் பிரம்மாண்ட விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.சிங்காநல்லூர் என்.ஜி.இராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் ருதம்பரா பவுண்டேஷன் இணைந்து நடத்திய இதில்,உலக சாதனை முயற்சிக்காக 3 ஆயிரத்து 60 மாணவர்கள் இணைந்து 25 லட்சம் விதைப்பந்து தயாரிக்கும் பணிகள் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இங்கு தயாரிக்கப்படும் விதைப்பந்துகள் கோவையை சோலையாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும், கோவையில் வனப்பகுதியிலும், குளம், குட்டைகளிலும் விதைப்பந்து வீசப்பட இருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவன் தெரிவித்தார்… நாட்டு மரங்களின் விதைகளை கொண்ட இந்த விதைப்பந்து நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது குறிப்பிடதக்கது.