நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் சம்பவங்களை கண்டித்து தஞ்சை அரசு இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் தஞ்சை அரசு சரபோசி கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்.
கல்கத்தாவில் மருத்துவ கல்லூரி முதுகலை பயிற்சி மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் என தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 8 ஆம் தேதி (ஆகஸ்ட் மாதம்) பணியில் இருந்த அந்த பெண் மருத்துவர் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணிபுரிந்ததாக கூறப்படுகின்றது. களைப்பின் காரணமாக அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவர் மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் சற்று ஓய்வு எடுக்க எண்ணி அங்கு தூங்கி இருக்கிறார். அதன் பின்தான் அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அடுத்த நாள், அதாவது 9 ஆம் தேதி காலையில் அவர் அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டார் .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/protest-against-the-sexual-assault-and-murder-of-a-female-doctor-doctors-and-general-public-across-the-country/
இதேபோல் தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டிலும் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இது போன்ற மாணவ மாணவிகள் இளம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும், மேலும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோசி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/thanjavurs-pappanadu-gang-rape-case-hunger-strike-to-arrest-the-leftover-criminals/
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடரும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து தடுக்க வலியுறுத்தியும் தஞ்சை அரசு சரபோசி கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.