கிஷோர்

பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஈட்டி எறிந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தலையில் பாய்ந்து மூளை சாவடைந்த சம்பவம். உலக சாதனை புரிந்த மாணவனின் சோக நிலை . மாவட்ட கல்வி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை.

முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வருபவர் திருமுருகன், இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருவரையும் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார், அதில் இவரது மகன் மூத்தவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், தனியார் பள்ளியில் தினம் தோறும் சைக்கிளில் செல்லக்கூடிய இவரது மகன் அன்று உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் திருமுருகன் இருசக்கர வாகனத்தில் சென்று பள்ளியில் விட்டுள்ளார். மாலை பள்ளி முடிந்தவுடன் மகனை அழைத்து வர சென்றவர் பள்ளிவிட்டு அனைவரும் வெளியேறிய பிறகும் மகன் வராது கண்டு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறார். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் உங்கள் மகனுக்கு லேசான காயம் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். உடனடியாக தன் மனைவிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் யாராவது செல்போன் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளார் இல்லை நாங்களே உங்கள் மனைவிக்கு தகவல் தெரிவித்து விட்டோம் என்று கூறிவிட்டு வடலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திருமுருகனை அழைத்து சென்றுள்ளனர் பள்ளி நிர்வாகிகள்.

அங்கே சென்று பார்த்த போது திருமுருகனுக்கு அதிர்ச்சி தலையில் முழுவதும் கட்டுக்களுடன் மகன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நேற்று அவர் சுயநினைவை இழந்து விட்டதாக அந்த மருத்துவமனை கைவிரித்த நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளை செயல் இழந்து விட்டதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது வரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அந்த மாணவன்.

நடந்தது என்ன அவரது தந்தை திருமுருகன் தெரிவிக்கிறார்.

கிஷோர் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் சிலம்பம் சுற்றுவதில் சிறந்து விளங்குபவன் அதற்காக இரண்டு உலக சாதனைகளை செய்துள்ளார் 4 மணி நேரம் சிலம்பம் தொடர்ச்சியாக சுற்றிக் கொண்டது மற்றும் ஒரே கையில் ஐந்து மணி நேரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றி உலக சாதனை மேற்கொண்டுள்ளார். அதற்காக அவருக்கு உலக சாதனை சான்றுகள் வழங்கவழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் பள்ளியில் கொக்கோ விளையாடிக் கொண்டிரக்கிறார் கிஷோர். அப்போது மறுபுறம் ஈட்டி எரியும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சில மாணவர்கள் அவர்கள் எரிந்த ஒரு ஈட்டி கிஷோரின் தலையில் புகுந்து மூளை வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போதிலிருந்தே சுயநினைவு இழந்திருக்கிறார் கிஷோர் ஆனாலும் மருத்துவர்கள் காப்பாற்றி விட முடியும் என்கிற நம்பிக்கையை தொடர்ந்து இது வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்கள் தந்தை திருமுருகன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here