தேனியில் ஆசிரியர் ஆபாசமாக பேசுவதாக ஆட்சியரிடம் மாணவி புகார்..!

2 Min Read
மாணவி

தேனி மாவட்டம் போடி அருகே பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் மச்சக்காளை ஆவார்.இவரின் மகள் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு தேனி மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு மருந்துகளை உட்கொண்டு வருகிறாள்.பின்னர் அவள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் அந்த மாணவி கூறும் போது நான் 12 ஆம் வகுப்பில் படித்து வருகிறேன்.தனக்கு பள்ளி ஆசிரியராக இருந்து வரும் பொட்டியம்மாள் நான் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் தன்னை சாதி ரீதியாகவும் தனக்கு இருக்கும் உடல் நலம் பிரச்சனைகள் பாதிப்பு குறித்து சக மாணவர்களிடம், தன்னை பற்றி அனைவரும் மத்தியில் கூறி தன்னை சாதி ரீதியாக திட்டுவதாக மாணவி மனம் உடைந்து குற்றச்சாட்டு கூறுகிறார்.

பெற்றோருடன் மாணவி

இதுகுறித்து அந்த மாணவி தன் தாயிடம் தெரிவித்த போது ஆசிரியரிடம் பேச வந்த தன் தாயிடம் உன் மகள் மீதுதான் தவறு உள்ளதாகவும் இது போல் என்னிடம் வந்து கேட்காதீர்கள் என கூறிய ஆசிரியர், தாயிடம் சொல்வதால் பாதிப்பு உனக்கு தான் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது,தலைமை ஆசிரியர் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ படிப்பில் கவனம் செலுத்து என்று கூறியுள்ளார்.

மாணவி

ஆனால் இதை தெரிந்து கொண்ட ஆசிரியர் பொட்டியம்மாள் என்னை முட்டி போட வைத்து சாதி பெயரை கூறி ஆபாசமாக திட்டி உனக்கு மதிப்பெண் போட முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மிரட்டியதாக மாணவி கூறுகிறார். மேலும் பள்ளியிலிருந்து டிசி வாங்கி விட்டு சென்று விடு என ஆசிரியர் மிரட்டுவதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டதாக மாணவி கூறினார்.

இந்நிலையில் தன்னை சாதி ரீதியாக குறிப்பிட்டு மாணவர்கள் மத்தியில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மாணவி புகார் அளித்தார்.பள்ளியில் சாதி,மத எண்ணங்களுக்கு இடமளிக்ககூடாது என்ற விதி இருந்து ஆசிரியரே இப்படி நடந்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Share This Article
Leave a review