சிலந்தியாறு தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்! பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

2 Min Read
சிலந்த்தியாறு

சிலந்தியாறு

- Advertisement -
Ad imageAd image

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் குறித்த தகவல் தமிழக கேரள அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.1958இல் கட்டப்பட்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், இந்த அமராவதி ஆற்றுப்படுகை மூலம் 110 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. அச்சம்: அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்கள் என்று பார்த்தால் அவை பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை ஆகும்.. இதற்கிடையே இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் பெருகுடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்த தடுப்பணை அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவை குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஸ்டாலின் பினராய்

கடிதம்

இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்தத் தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் கேரள அரசின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர்: இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாகச் சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (23-5-2024) கடிதம் எழுதியுள்ளார்.

சிலந்தி ஆற்றில் தடுப்பணை

அறிக்கையில் அனல் காட்டிய சீமான் இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு. இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

தோழமை உணர்வு

இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களைத் தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வலியுறுத்தியுள்ளார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a review