பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்..!

2 Min Read
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்

சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- காதில் பூ சுற்றி கொண்டு மனு அளித்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்.

- Advertisement -
Ad imageAd image

சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் இடத்தில் நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், பள்ளி வாசல் கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதையும் தடுத்து நிறுத்த கோரியும், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் ஊர் பூ சுற்றி கொண்டு, பூ பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்

இது குறித்து இந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் இடத்தில் நிர்வாகத்திற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டி உள்ள நிலையில், தற்போது அந்த பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டியும் பள்ளி வாசல் கபரஸ்தானு இடத்தில் கடை வாடகைக்கு விடுகின்ற பணியையும் செய்து வருவதாகவும், இது அரசாங்க சட்டத்திற்கு புறமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வெங்கட்ராமன் என்பவர்களுக்கு சொந்தமான வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தையும் வாங்கி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடைகளை கட்டியும் வாடகை வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிவாசல் அருகில் இருக்கின்ற இடம் கருவூலக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் செல்வாக்கை வைத்து அதனை ரத்து செய்து இருப்பதாகவும், பள்ளி வாசல் கபரஸ்தானில் இறந்தவர்களைப் புதைப்பதற்காக வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்திற்காக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம்

எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் படி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share This Article
Leave a review