- சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 45, தொழிலதிபரான இவர் சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் பத்து தாகம் கிராமத்திற்கு வந்தார்.
மீண்டும் சென்னை செல்வதற்காக தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வளம்பக்குடி பழைய பிருந்தாவனம் ஹோட்டல் அருகே இயற்கை உபாதை கழிக்க காரை நிறுத்தி உள்ளார்.
அப்போது அந்த சாலையில் நின்று இருந்த திருநங்கை ஒருவர் தொழிலதிபரிடம் சாப்பிட பணம் கேட்டுள்ளார். நந்தகுமார் 300 ரூபாய் கொடுத்துள்ளார். அவரிடம் பணம் அதிகமாக இருப்பதை பார்த்த திருநங்கை சத்தம் போட்டு சிறிது தூரத்தில் நின்று இருந்த மூன்று திருநங்கைகளை அழைத்துள்ளார்.
அவர்கள் ஒன்றாக சேர்ந்து நந்தகுமாரிடம் இருந்து 50000 ரூபாய் பணம், அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினையும் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த ரோந்து போலீஸார் மற்றும் செங்கிப்பட்டி போலீஸார் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி கொண்டிருந்த நான்கு திருநங்கைகளை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நால்வரும் சேர்ந்து நந்தகுமாரிடம் பணம் நகையை பறித்தது தெரிய வந்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-public-engaged-in-a-sapling-protest-demanding-the-repair-of-the-potholed-road/
இதனை அடுத்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உளாள பாலக்கொம்பை தெற்கு தெருவை சேர்ந்த சுபஸ்ரீ வயது 25 , ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சுல்லிப்பாளையத்தை சேர்ந்த ரஃபியா வயது 29, தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேடையை சேர்ந்த மயூரி வயது 28, அரியலூர் மாவட்டம் காமரசவள்ளியை சேர்ந்த தேவயானி வயது 37, ஆகிய நான்கு திருநங்கைகளையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.