மாநிலக் கல்விக்கொள்கை- உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

2 Min Read
அமைச்சர் பொன்முடி

தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவது கொண்டாடுவது என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அதன் அடிப்படையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக கலைஞரின் இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி,எழுத்துப்போட்டி என இலங்கியம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.வெர்றி பெரும் மாணவர்கர் கவுரவிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
மாணவர்கள்

நாமக்கல் கவிஞர் மாளிகையில் கலைஞர் நூற்றாண்டு விழா – சமூக நீதிக் காவலர் கலைஞர் குழு ஆலோசனைக்கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி ;

கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கிடையே பேச்சுப்போட்டி போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கல்லூரிகள் அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முறையே 3000, 2000, 1000 வீதம் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தலைமச்செயலகம்

மேலும் தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக அளவில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல்பரிசு 10,000, இரண்டம் பரிசு 6000, மூன்றாம் பரிசாக 4000 ரூபாய் பரிசுகள் வழங்கப்படும் என்றும், மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெருவோருக்கு முதல் பரிசாக 1 லட்சம் இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி கலைஞரும் தமிழும், கலைஞரும் சமூக நீதியும், கலைஞரும் அரசியல் அதிகாரமும், கலைஞரும் பெண்ணியமும், கலைஞரும் அறிவயலும் என்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் மற்றும் கலைஞர் வரலாற்றை மாணவர்கள் தெரிந்த கொள்ளும் வகையில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

அரசுப்பள்ளி

விழுப்புரத்தில் நடைபெறும் கண்காட்சியில் குறும் காணொலி, பேச்சுப்போட்டிகள் நடைபெறும்.

இதற்கென 25 லட்சம் ரூபாய் அரசுத்துறை நிதி ஒதுக்கியுள்ளது.

தனியார் கல்லூரிகளும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பார்கள் என தெரிவித்தார்.

மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கல்விக்கொள்கை என்பது மக்களுக்கானது, அதில் மக்களின் பங்கு அவசியம். கல்விக்கொள்கை பற்றிய புரிதல்களை இந்த சமூகம் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கல்விக்கொள்கை உறுவாக்கப்படுகிறது.விரைவில் கல்விகொள்கை உருவாக்கப்படும் என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம்.

Share This Article
Leave a review