சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனில் எலி சாப்பிட்ட திண்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வந்த கேண்டீனில் விற்பனைக்கு வைத்திருந்த வடை, பஜ்ஜி போன்ற திண்படங்கள் மீது எலி ஒன்று அமர்ந்து அந்த திண்பண்டங்களை சாப்பிடக் கூடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வீடியோ பல குழுக்களில் பகிரப்பட்டது.இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளானார்கள்.மருத்துவமனையின் கேண்டினின் நிலையே இப்படி இருந்தால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்புகின்றனர்.இந்த கேண்டினில் தான் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்ப்பவர்கள் உணவுப்பொருட்களை வாங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கிவந்தனர்.

இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எலி சாப்பிட்ட திண்பண்டங்களை விற்பனை வைத்திருந்ததாக புகார் எழுந்தது. எலி சாப்பிட்ட உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி சப்பிடுவதா என்று பொதுமக்கள் கேண்டீனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு வந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணையில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு எலி உணவுப் பொருட்களை உண்ணும் விடியோவை பார்த்தனர்.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி சாப்பிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக புகாருக்குள்ளான தனியார் கேண்டீனை மூடுமாறு மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதனை தொடர்ந்து மருத்துவமனை கேண்டின் மூடப்பட்டது.கேண்டின் உரிமையாளரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், எலி சாப்பிட்ட உணவை மக்களுக்கு விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இதையடுத்து, அந்த கேண்டீனில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு மக்கள் உட்கொள்ளாத வண்ணம் தூக்கி எரியுமாறு ஸ்டானில் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஸ்டான்லி மருத்துவமனை கேண்டினில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.எலி சாப்பிட்ட உணவை யாரும் வாங்கவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்,உறவினர்கள் என பலரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் இது போன்ற செயல்களை கண்காணிக்க தவறியதாக பொது மக்கள் குற்றச்சாட்டு.கேண்டின் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.மருத்துவமனை கேண்டினே இப்படி இருந்தால் மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்புகின்றனர் பொது மக்கள்.