முதல்வர் ஸ்டாலின் ஒளிபரப்பப்படாத உரை இலங்கை மறுப்பு

1 Min Read
ஸ்டாலின் ஜீவன் தொண்டைமான்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ உரை இலங்கையில் ஒளிபரப்பப்பட வில்லை பதிலளிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.மலையக தமிழர்கள் வருகையின் 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அந்நாட்டின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ‘நாம் 200’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -
Ad imageAd image
நிர்மலாசீத்தாராமன்

இலன்கையின் நிலங்களை சீர்திருத்தி அதை விவசாயத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்த பெருமை தமிழக விவசாயிகளையே சாரும்.அவர்கள் இல்லையென்ரார் அந்த நிலங்கள் சரி செய்யப்பட்டிருக்க முடியாது.இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு சென்று 200 ஆண்டுகள் ஆகிறது.

இந்திய வம்சாவளி அல்லது மலையக தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து, முக்கியமாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கை தீவு நாட்டிற்கு வந்ததன் 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அந்நாட்டின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ‘நாம் 200’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜீவன் தொண்டைமான்

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்மை விருந்தினராக இருந்தார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொளி நிகழ்ச்சிக்கு அனுமதி பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.கானொளியில் மலையக தமிழர்களின் உழைப்பு மற்றும் அவர்களது செயல்பாட்டையும் பாராட்டி தமிழக முதல்வர் பேசிய அந்த உரையை ஒளிபரப்படவில்லை.இந்த நிகழ்வில் மத்திய அமைச்சார் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார்.எனவே அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகப்படுகின்றனர் திமுகவினர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அழைக்கப்பட்டதாகவும், அவரது பயணத்துக்கு மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார் என்றும் கூறப்படுகிறது.இதற்கும் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review