சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு வந்திருந்த அமைச்சர் பொன்முடி எதிர்க்கட்சி வரிசையில் உட்கார சென்றார். திமுகவினர் உஷார் படுத்திய நிலையில் தன்னுடைய இருக்கைக்கு சசென்று அமர்ந்தார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
தடுமாறும் அமைச்சர் பொன்முடி.
சமீபகாலமாக அமைச்சர் க பொன்முடி ‘ஓசி பஸ்ஸில தானே போறீங்க’ , ‘அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க’ , ‘வாய மூடு , நல்ல வேலை உங்க வீட்டுக்காரர் இல்லையா , இருந்திருந்தா நீயே மேல அனுப்பியிருப்ப ‘ என பொதுமக்களை ஒருமையில் பேசி , பேசுபொருளாக மாறிவருகிறார்.
தி.மு.க அமைச்சர்கள் அடிக்கடி அதிரடியாக ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது என்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், உயர்க்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி ‘ஓசி பஸ்ல தானே போறீங்க’ என்று ஒரு அரசு விழாவில் பேசி சர்ச்சைக்கு உள்ளான அமைச்சர், குடிநீர் பிரச்னை குறித்து கேட்ட பொதுமக்களிடம் , ‘எனக்கு நீங்கள் ஓட்டு போட்டு கிழிச்சிட்டிங்க…’ என்று பேசி மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார் .

இதனிடையே சென்ற வாரம் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பேசிய பொன்முடி “உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன்” என்று தன்னுடைய சாதனைகளை விளக்கிக் கொண்டு இருந்தபோது , கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக் கூறி கூச்சல் எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள்… நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு தெரியும்” என்று கோபமாகப் பேசினார்.

அதன் பின்னர் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் குறையை சொல்லிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை பார்த்து ‘வாயை மூடு ! எங்க உங்க வீட்டுக்காரர் இல்லையா ? நல்லவேளை அவர் இல்லை இருந்திருந்தா நீயே மேல அனுப்பியிருப்ப என்று ஒருமையில் பேசினார். இந்த நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார சென்றுள்ளார்.
தற்போது திருச்சியில் அமைச்சர் கே என் நேருவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சிவாவிற்கும் ஏற்பட்ட மோதல் என திமுகவில் தொடர்ந்து நீடிக்கிறது சர்ச்சைகள். முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசும் பொழுது கட்சி காரர்கள் செய்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார் . இப்படி ஆகவே இருக்கிறது அமைச்சர்களின் நிலை.