நாம் தமிழர் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் விழ விழ எழுவோம் என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தோல்வி என்பது வெற்றியின் தாய். தோற்று தோற்று வென்றவனுக்கு இதயம் இரும்பு போல இருக்கும். நாம் தமிழர் கட்சியும் இந்த நாட்டை ஆள்வது உறுதி.
மக்கள் கடந்த காலங்களை பார்ப்பதில்லை, அதே போன்று எதிர்காலத்தையும் பார்ப்பதில்லை, நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்ன தேவை என்பதில் மட்டுமே கவனம் கொள்ளுகிறார்கள் நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்ன நடந்தது என்பதை பற்றி கூட தெரிந்து கொள்ள விரும்பவில்லை இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று இருக்கிறார்கள் மக்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்கிற ஒரு நாடே கிடையாது. பல்வேறு நிலப்பரப்புகளாக பிரிந்து கிடந்தது தான் இப்போது இந்திய என அழைக்கப்படுகிற ஒரு நாடு.வெள்ளைக்காரர்கள் வியாபாரம் செய்யவே இங்கு வந்தார்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வ.உ.சிக்கு ஒரு சிலை இல்லை ஆனால் வல்லபாய் படேலுக்கு சிலை இருக்கிறது. திராவிடம் என்றால் என்ன என்று ஸ்டாலினுக்கே தெரியாது. உலகின் மூத்த மொழி தமிழ். தமிழ் மொழியிலிருந்து பிச்சை கொடுக்கப்பட்ட மொழிதான் ஆங்கிலம்.
அரசு தயாரிக்கிற ஆவின் பாலிலே கலப்படம் உள்ளது. விளம்பரத்தில் வருவது போல தான் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திமுக, அதிமுக ஆட்சியில் ஆடு, மாடு, கோழி கொடுத்தார்கள் ஆனால் நான் மாடு வளர்ப்பதை அரசாங்க வேலை என்று சொன்னால் கேலி செய்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வணிக நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பதாகைகள் முழுவதும் தமிழிலே இருக்கும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழி இல்லை.

கூட்டணிக்காக என்னிடம் எவ்வளவோ பேர் என்னிடம் பேசுகிறார்கள் பெட்டி கொடுக்கிறோம் என்று கூட பேசுகிறார்கள் ஆனால் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்.இங்கு இருக்கிற கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் தமிழர்களின் வரலாறு இருக்கிறது. காவல்துறையினருக்கு சங்கம் இல்லை நாட்டில் நீதிபதிக்கு விடுமுறை இருக்கிறது ராணுவ தளபதிக்கு கூட விடுமுறை இருக்கிறது ஆனால் காவல்துறையினருக்கு விடுமுறை என்பதை கிடையாது நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் காவல்துறையினருக்கு விடுமுறை விடப்படும் தமிழர்களின் வரலாற்றை மீட்டு எடுக்கவே நாம் தமிழர் புரட்சிப்படை உருவாக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.