மத்திய பிரதேசம் செஹோர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை , சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து கிட்டத்தட்ட 52 மணிநேரம் நீடித்த கடினமான மீட்புப் பணி துரதிர்ஷ்டவசமாக வீணானது, செஹோர் மாவட்டத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து , மூன்று வயது சிருஷ்டி குஷ்வாஹாவின் உயிரற்ற உடலை மட்டுமே வெளியே கொண்டு வர முடிந்தது.
குஜராத்தைச் சேர்ந்த ரோபோ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற குழுவினர் உதவியால் சிருஷ்டி குஷ்வாஹாவின் உயிரற்ற உடல் வியாழன் மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டது . இந்த குழு ரோபோவைப் பயன்படுத்தி சிறுமியின் நிலை குறித்த முக்கியமான தகவல்களைத் தேடவும், அவளை வெளியே கொண்டு வருவதற்கான சிறந்த வழியைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தினர் இருப்பினும் அணைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது .

மத்திய பிரதேச மாநிலம் , செஹோர் மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தை சேர்ந்த விவயசாயி ராகுல் சிருஷ்டி குஷ்வாஹா , ராணி தம்பதியின் மகள் சிருஷ்டி சிருஷ்டி குஷ்வாஹா.
மூன்று வயதான இந்த குழந்தை, கடந்த 6ம் தேதி வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்த போது , அப்பகுதியில் மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் மதியம் 1 :30 எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் .

குழந்தையை உயிருடன் மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க, அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டதை அடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர் .முதலில் 29 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை , மீட்பு பனியின் போது இயந்திரங்களின் அதிர்வால் வழுக்கி , 100 அடி ஆழத்திற்கு உள்சென்றது .
குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் குஜராத்தை சேர்ந்த ‘ரோபோடிக்ஸ்’ நிபுணர்களின் உதவியுடன், மீட்பு பணி மூன்றாவது நாளான நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் , 52 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. டாக்டர்களும் இதை உறுதி செய்தனர்.

இந்நிலையில் ஆழ்துளை கிணறு உள்ள நிலத்தின் உரிமையாளர் மீது போலீசார் 304 IPC பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசரனை மேற்கொண்டு வருகின்றனர் .
மத்திய பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்த நான்காவது சம்பவம் இதுவாகும். அவர்களில் மூவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த துயர சம்பவம் நாடு முழுவுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .