ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை மேம்படுத்தப்பட திட்டம்- தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா..!

2 Min Read
தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா

ரூ.23 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் பேட்டி.

- Advertisement -
Ad imageAd image

தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மருத்துவ முறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனையை தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டார்.

தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா

அப்போது மக்களை தேடி மருத்துவ முறைகளின் செயல்பாடுகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டு அறிந்தார்.மேலும் அங்குள்ள ரத்த சுத்திகரிப்பு மைய பகுதியை பார்வையிட்டு அங்கு இருந்த நோயாளிடம் நலம் கேட்டு விசாரித்தார்.பின்பு அங்கு இருந்த நோயாளிடம் உடல் நல பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தனது உரையை தொடங்கினார்,பின்வறுமாறு: ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அரசினர் அரசு மருத்துவமனையில் 700 பேர் புறநானிகளாகவும், 60க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்குவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.பின்னர் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அதி நவீன சிகிச்சைகளுடன் 50 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அரசினர் அரசு மருத்துவமனையில் கூடிய விரைவில் அமைய உள்ளது என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா

மேலும் சிறுநீரக செயல் இழப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கூடுதலாக ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களும் ஏற்படுத்தப்பட உள்ளது என கூறினார். இந்த ஆய்வின்போது , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி , தேசிய ஊரக நல்வாழ்வு திட்ட இயக்குனர் டாக்டர் சில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் , மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் , பயிற்சி ஆட்சியர் சங்கீதா , ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் செல்வகுமார் , பொதுப்பணித்துறை பொறியாளர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Share This Article
Leave a review