வடதமிழகத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கள்ளக்குறிச்சி நகரம்.
விவசாயம், குச்சி வள்ளிக் கிழங்கில் மாவு தயாரித்து அதன் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலமான ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை என கலவையான சமூக, பொருளாதார, நிலவியல் முகம் கொண்டது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.

அதைப் போலவே தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றப் பிரிவுகளில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்றும் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ளன. ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்றுப் பிரிவுகளும் சேலம் மாவட்டத்தில் உள்ளன.

கடந்த முறை திமுக அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கௌதமசிகாமணி போட்டியிட்டார். அதிமுக அணியின் சார்பில் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிட்டார்.திமுகவை சேர்ந்த பொன்.கௌதமசிகாமணி வெற்றி பெற்றார்.இந்த முறை மீண்டும் இவர் போட்டியுவார் என தெரிகிறது.ஆனாலும் தொகுதியில் அவருக்கு செல்வாக்கில்லை என்று சொல்லுகிறார்கள் அந்த தொகுதி மக்கள்.

தற்போது நடை பெரும் தேர்தலில் திமுக சார்பில் பொன்.கௌதமசிகாமணி போட்டியிட உள்ளதாக பேசப்படுகிறது.திமுகவில் மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அங்கையற்கன்னியும் போட்டியிடப்போவதாக பேசப்படுகிறது.இவருக்கு கனிமொழி ஆதரவு உண்டு.

இந்த நிலையில் இதற்கு முன்னர் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மவுண்ட் பார்க் மணிமாறனும் போட்டியிட வாய்ப்புள்ளதேக பேசப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இலாட்டரி அதிபராக இருந்த பிரபல தொழிலதிபர் கோவை மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற வி.சி.க. மாநாட்டில் அக்கட்சியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு வி.சி.க.வில் முக்கியத்துவமான இரண்டாம் நிலைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் விசிக ஒரு பொது தொகுதியை கேட்டுள்ளது.அந்த வகையில் இவரும் பேசப்படுகிறார்.

பாஜக கூட்டணியில் தேமுதிக சேரும் நிலையில் விஜயகாந்த் மைத்துனர் சுதீசும் போட்டியிடலாம் என பாசப்படுகிறது.அதே போன்று ஐஜேக சார்பில் ரவி பச்சமுத்துவும் இந்த தொகுதியின் மீது ஒரு கண் வைத்துள்ளார்.அதிமுக சார்பில் மீண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமராஜும் போட்டியிடுவார் என தெரிகிறது.நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்னும் யாரும் உறுதியாகவில்லை.