புரட்டாசி முதல் வாரத்திருவிழாவை முன்னிட்டு நல்லூரில் திருப்பதி ஏழுமலையானுக்கு சிறப்பு வழிபாடு.

1 Min Read
  • புரட்டாசி முதல் வாரத்திருவிழாவை முன்னிட்டு நல்லூரில் திருப்பதி ஏழுமலையானுக்கு சிறப்பு வழிபாடு. ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் குழு சார்பில் மூன்றாம் ஆண்டு புரட்டாசி முதல் வாரத்திருவிழா மற்றும் சிறப்பு தளிகை பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு பொன்னாபரணங்களுடன் ஜொலித்தபடி திருப்பதி ஏழுமலையான் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பெருமாளுக்கு உகந்தமான ஒன்பது வகையான பலகாரங்களும் விதவிதமான பழங்களும் படையலிடப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதன்குமாருக்கு திருவிழா குழுவினர் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.அலமாதி ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். விழாவின் சிறப்பம்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் குழுவின் நிர்வாகி மணிகண்டன் தலைமையில் விழா ஏற்பாடுகளை கார்த்திக்ராஜா, ஜீவா, தமிழரசன், நித்திஷ், ஹரிஷ், விக்கி, பிரகாஷ், வேலு, ரூபேஷ், ஹரிஷ், லோகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review