- தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி. ஆறு மாநிலங்களை சேர்ந்த500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்பு.
தஞ்சாவூர் அன்னை சத்யா உள்விளையாட்டு அரங்கில் தேசிய கராத்தே கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியை தேசிய செயலாளர் மனோஜ் குமார் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, ஆந்திரம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். செய்முறை பயிற்சி, சண்டை பயிற்சி உள்ளிட்டட போட்டிகள் நடைபெறுகின்றன.
கொஞ்சம் இதையும் படிங்க :https://thenewscollect.com/even-though-there-is-no-training-ground-in-pattukottai-the-boy-has-accumulated-many-medals/
ஜூனியர், சப் – ஜூனியர் உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் – கேடயங்களும் வழங்கப்பட்டன.