நெதர்லாந்திடம் சுருண்டது தென் ஆப்பிரிக்கா..!

3 Min Read
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணி வீரர்கள்

ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் போட்டி தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 38 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -
Ad imageAd image

இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டி கனமழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இதனால் ஏழு ஓவர்கள் குறைக்கப்பட்டு தலா 43 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீச முடிவு செய்தது. விக்ரம்ஜித்,மேக்ஸ் ஓ தாவுத் இணைந்து நெதர்லாந்து இன்னிங்சை தொடங்கினர்.

விக்ரம்ஜித் 2, மேக்ஸ் 18 ரன்னில் வெளியேற அடுத்து பாஸ் டீ லீட் 2, கோலியின் ஆக்கிர்மேன் 12, சைபர் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். நெதர்லாந்து 20.2 ஓவரில் 82 ரன்னுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், நிடமனரு – கேப்டன் எட்வர்ட்ஸ் ஜோடி ஆறாவது விக்கட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 30 ரன் சேர்த்தது. தேஜா 20 ரன் வான் பீக் 10 ரன்னில் விக்கட்டை பறிகொடுத்தனர்.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணி வீரர்கள்

நெதர்லாந்து 33.5 ஓவரில் 140 ரன்னுக்கு ஏழு விக்கெட் இழந்து திணறியதால் 200 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என்ற நம்பிக்கை உடன் தென்னாப்பிரிக்க வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். ஆனால், நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் 53 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.

மெர்வ் 29 ரன் ( 19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர் ) விளாசி என்ஜிடி வேகத்தில் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் எட்வர்ட்ஸ் உடன் இணைந்து ஆரியன் தத் மூன்று சிக்ஸர்களை பரக்கவிட்டு அமர்க்களப்படுத்த, நெதர்லாந்து 43 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 245 ரன் குவித்தது.

எட்வர்ட்ஸ் 78 ரன் ( 69 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்ஸர்) , ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் என்ஜிடி, யான்சன், ரபடா தலா 2, கோயட்ஸீ, மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதை அடுத்து 43 ஓவரில் 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களில் அணிவகுக்க 11.2 ஓவரில் 44 ரன்னுக்கு நான்கு விக்கெட் இழந்து திணறியது.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணி வீரர்கள்

கிளாஸன் 28 ரன் எடுத்து வான் பீக் பந்து வீச்சில் விக்ரம்ஜித் வசம் பிடிபட, தென் ஆப்பிரிக்கா 89 ரன்னுக்கு ஐந்தாவது விக்கெட் இழந்து மேலும் பின்னடைவை சந்தித்தது. யான்சன் 25 பந்தில் 9 ரன் எடுத்து வான் மீகரன் பந்து வீச்சியில் கிளீன் போல்ட் ஆனார். ஓரளவு தாக்கு பிடித்த மில்லர் 43 ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து போல்ட் ஆனார். கேசவ் மகராஜ் 40 ரன் ( 37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) விளாசினார். தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 207 எடுத்தது. 38 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. நெதர்லாந்து பந்து வீச்சில் வான் பீக் 3, மெர்வ் 2, மீகரன் 2, ஆக்கர்மேன் 1 விக்கெட் வீழ்த்தினார்.

நெதர்லாந்து முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம் கண்டது.

Share This Article
Leave a review