சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: ஐகோர்ட் விரைவில் விசாரணை.!

1 Min Read
  • சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

- Advertisement -
Ad imageAd image

இந்த வழக்கை விசாரித்த,திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனித்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a review