பார்சலில் பலவித பொருட்கள் வருவதை நாம் அறிவோம்.வெகுதூரத்தில் இருந்து நேரில் வர முடியாதவர்கள் சில பொருட்களை பார்சலில் அனுப்பி வைப்பது வழக்கம்.ஆனால் இப்போது பார்சலில் ஒரு வித்தியாசமான பொருள் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,என்ன பொருள் அது.
திருவையாறு அருகே முகமது பந்தர் ரஹீம் நகரை சேர்ந்தவர் முகமது காசிம் ,முகமது பந்தர் ஜமாத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு நேற்று மதியம் பிரான்சிஸ் கொரியரில் இருந்து தொலைபேசி மூலம் அலுவலர்கள் முகமது காசிம் என்ற பெயரில் பார்சல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பார்சல் வாங்க முடியவில்லை. மாலை 7 மணி அளவிற்கு கொரியர் அலுவலகத்தில் இருந்து பார்சல் கொண்டு வந்து கொடுத்து சென்று உள்ளனர்.

பார்சலை வாங்கி பிரிக்காமல் தனது மகன் முகமது மஹாதிரை விட்டு பிரித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார் காசிம் . பார்சலை பிரித்து பார்த்த மஹாதீர் அதிர்ந்து போனார் ஆமாம் அந்த பார்சலில் மண்டை ஓடு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தூர் நாற்றம் வீசி உள்ளது. உடனடியாக இதுக்குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
பார்சலில் அனுப்புனர் முகவரியில் நவ்பாய் கான் என பாதி ஆங்கிலம் தமிழ் கலந்து உள்ளது. பார்சலில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு பார்சல் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.