திருப்பதியில் கார் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு .

1 Min Read
விபத்துக்குள்ளான கார்

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் , விஜயவாடா பகுதியை சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு பல்வேறு கோவில்களுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர் .

நேற்று மதியம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள மிட்டகண்ட்ரிகா அருகே அவர்களது கார் சென்று கொண்டிருந்த பொது எதிரே அதிவேகமாக வந்த லாரி,  மீது கார் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது . விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி, லாரியில் சிக்கியது.

காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இந்த விபத்தில் உயிர்பிழைத்த ஒருவரை மட்டும் உடனடியாக ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

விபத்துக்குள்ளான கார் 

இந்த கோரா விபத்தில்  காரில் பயணம் செய்த நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் ஆறு பேர் இறந்தனர்.

இந்த சம்பவமானது திருமலையில் உள்ள ஏழுமலையான்  கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திருப்பதியில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற போது மிட்டகண்டிரிகா அருகே எதிர்திசையில் வந்த லாரி மீது கார் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

பலியானவர்கள் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் ரமேஷ், நரசிம்ம மூர்த்தி, ராஜ்யலட்சுமி, ஸ்ரீலதா, அக்‌ஷயா மற்றும் வெங்கட ராம்நம்மா என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் உயிர்பிழைத்து சிகிச்சை பெற்று வரும் நபர் பரத் என்பது தெரியவந்துள்ளது .

போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிவேகமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Share This Article
Leave a review