சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதல் அமைச்சர் அறிவிப்பு

2 Min Read
முதல்வர் ஸ்டாலின்

சிவகாசி அருகே ஊராம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் பரிதாபமாக இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

மேலும் காயமடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று  சிவகாசி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சிவகாசி அருகே பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரை. இவர் பட்டாசு ஆலை நடத்த  உரிய  உரிமம் பெற்று ஊராம்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்ட  பட்டாசுகளை  உற்பத்தி செய்கின்றனர்.

நேற்று  வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிற்பகல் சுமார் 12 மணி அளவில் மருந்து கலவை செய்யும் அறையில் பட்டாசு மூலப் பொருட்களை கலவை செய்யும்போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

பட்டாசு ஆலை

அருகில் இருந்த அறை முழுமையாக சேதமடைந்தது. இதில் அந்த அறையில் பணிபுரிந்த மம்சாபுரத்தை சேர்ந்த குமரேசன் பள்ளபட்டியை சேர்ந்த சுந்தர் ராஜ் , ரிசர்வ் லைன் சிவன் காலணியை சேர்ந்த அய்யம்மாள் மற்றும் இருளாயி  ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரேசன், சுந்தர்ராஜ் மற்றும் அய்யம்மாள் ஆகிய   மூன்று பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து அய்யம்மாள், காலில் காயமடைந்த இருளாயி ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து முதல் அமைச்சர்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்

வெடி விபத்து

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயிக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த கோரா விபத்தை  நடந்தை குறித்து பட்டாசு தனி வட்டாட்சியர் மற்றும் ஶ்ரீதர், வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் தீப்பற்றி சேதம் அடைந்த கட்டிடத்தை நீண்ட நேரம்  போராடி  சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் . விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a review