சுற்றுலா காரை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானை

2 Min Read
காட்டு யானை

கோவை மற்றும் கோத்தகிரி போன்ற இடங்களில் வனவிலங்குகலின் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது.இப்படி காடுகளை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் பொது மக்களை அச்சுருத்துவதுடன் வாகனங்களையும் சேதப்படுத்தி வருகிறது.வனத்துறையினர் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கருத்தாகும்.தொடர்ந்து வன விலங்குகளின் இந்த செயச் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கீழ்த்தட்டப்பல்லம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று திடீரென சாலையில் மிகவும் ஆக்ரோசமாக சுற்றிவந்தது.யானை வருவதை கண்டு பலரும் அச்சப்பட்டனர்.இது போல அடிக்கடி இந்த பகுதிகளில் நடப்பதுண்டு என்கிறார்கள் இந்த பகுதிகளில் பயனிப்பவர்கள்.

காரை தாக்கும் யானை

அப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சுற்றுலா கார் ஒன்று வந்தது அந்த காரை தூரத்தியது காட்டு யானை/காட்டு யானைதுரத்துவதை கண்டு காரில் இருந்தவர்கள் காரை விட்டுவிட்டு தப்பித்து ஓடினர். பின்னர் அந்த காரை அந்த யானை சேதப்படுத்தியது.இதனை முன்னாள் இருந்த வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்தனர்.காரில் பயணித்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது,வாகனங்களில் வந்தவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கதையாக உள்ளது. மேல்தட்டப் பள்ளம் பகுதியில் காட்டு யானை ஏற்கனவே பேருந்து கண்ணாடியை உடைத்த நிலையில் மீண்டும் காரை சேதப்படுத்தியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்தந்துள்ளனர்.எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வாகனங்களை பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றும் கோத்தகிரி வனத்துறையினர் நாள்தோறும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ரோந்து பணியை தொடர வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யானை

வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கிடைக்காததே இது போன்ற வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறுவதற்கு காரணமாகி வருகிறது.வனங்களில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு,தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது வன ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Share This Article
Leave a review