கோவை சங்கனூரை சேர்ந்தவர் மணிகண்டன் . கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி இவர்களுக்கு திருமணம் ஆகி சித்தார்த். என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கர்ப்பினியாக இருந்த ருக்குமணி இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்ட ருக்மணிக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தந்தையுடன் இருந்த சித்தார்த் திடிரென மாயமானார். இதையடுத்து பெற்றோர்கள் இருவரும் சக பொதுமக்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் சாலையில் நின்றிருந்த அந்த சிறுவனை மீட்ட முதல் நிலைக்காவலர் ஸ்ரீதர் என்பவர் குழந்தையிடம் பேச்சுக்கொடுத்து தாய் இருக்கும் இடத்தில் பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளார். முதல் நிலை காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் அங்கிருந்தவர்களிடமும் அறிவறுத்தியுள்ளனர்.