இலங்கை தமிழ்நாடு இடையே கப்பல் போக்குவரத்து.

2 Min Read
செரியாபாணி கப்பல்

இலங்கையும் தமிழ்நாடும் இயற்கையாகவே ஒன்றினைந்த நாடுகள் தான்.இந்த இரு நாட்டிற்கிடையே போக்குவரத்து சாதாரணமாக இருந்து வந்தது.இலங்கையில் உள் நாட்டுப்போர் நடைபெறுவதற்கு முன் வரை இந்த கடல் வழி போக்குவரத்து இருந்து வந்தது.போர் காரணமாக இந்த கடல்வழி போகுவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.அதன் பின்னர்,

- Advertisement -
Ad imageAd image

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது.காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.காலை 8.15 மணிக்கு நாகையில் இருந்து இலங்கைக்கு முதல் கப்பல் புறப்பட்டது.150 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்ய முடியும், ரூ.7,670 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; தொடக்க நாளையொட்டி இன்று ஒருநாள் மட்டும் ரூ.3000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயனிகள் கப்பல்

செரியாபாணி கப்பல்

இதற்காக ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் “செரியாபாணி” என பெயரிட்டப்பட்ட கப்பல் கொச்சினில் இருந்து நாகைக்கு வந்தது.

நாகை டூ இலங்கை கப்பல் சேவை

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இருவருக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன.இதில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

செரியாபாணி கப்பல்

பிரதமர் நரேந்திர மோடி

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடக்கி வைத்தார். இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற உள்ள விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால்
மற்றும் மாநில சிறு துறைமுகள் அமைச்சர் எ.வ வேலு, சட்டதுறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் நாகை துறைமுகத்தின் உள்ளே அமைந்துள்ள பயணிகள் முனையத்தில் 50 பேர் டிக்கெட் முன்பதிவு செய்தனர். கப்பல் போக்குவரத்து சேவையை முன்னிட்டு பயணிகள் முனையத்தினை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று முதல் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.வரலாற்று சிறப்புமிக்க கப்பல் போக்குவரத்தால் இலங்கை மற்றும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெறுவதுடன் இரு நாட்டிற்கு இடையே நல்லுறவு ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a review