
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் சாத்தான்குளம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய காவல் நிலையத்தில் பணிபுரிந்த 10 காவல் துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் இறந்த நிலையில் மற்ற 9 பேரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் அவர்களின் மூன்றாம் நினைவு தினம் தற்போது சாத்தான்குளத்தில் நடைபெற்று வருகிறது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய தலை வர்கள் மரியாதை செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.