மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஆம்னி பஸ்ஸில் பாலியல் தொல்லை – 2 பேர் கைது..!

3 Min Read

விழுப்புரம் அருகே ஆம்னி பஸ் மருத்துவகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தொடர்பாக, 12 வாலிபர்களுக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி ஹோமியோபதி படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி தீபாவளி விடுமுறையில் சென்னையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார். பின்னர் மீண்டும் நேற்று முன் தினம் இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து, கன்னியாகுமரிக்கு தனியார் ஆம்னி பஸ்ஸில் புறப்பட்டார். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திற்கு இரவு 11 மணி அளவில் வந்தது. அப்போது அங்கிருந்து திருநெல்வேலியை சேர்ந்த 12 வாலிபர்கள் மது போதையில் அந்த பஸ்ஸில் ஏறினர்.

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது

இவர்கள் 12 பேரும் புதுச்சேரியில் மது குடித்து தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வந்தனர். அங்கிருந்து திருநெல்வேலிக்கு செல்ல அந்த ஆம்னி பஸ்ஸில் ஏறினர். திண்டிவனத்தில் இருந்து அந்த பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த வாலிபர்களில் இரண்டு பேர் குடிபோதையில் மாணவியை பற்றி ஒரு மேலும் அருவருக்கத்தக்க வார்த்தைகளிலும் பேசினர். இது பற்றி அந்த மாணவி பஸ் டிரைவர், மாற்று டிரைவர் ஆகியவரிடம் முறையிட்டுள்ளார்.

டிரைவர்கள் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. இருப்பினும் இரண்டு வாலிபர்களும் அந்த மாணவி தொடர்ந்து தகாத வார்த்தை திட்டி வந்துள்ளனர். இது பற்றி மாணவி விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள தனது உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் இருந்த இரண்டு வாலிபர்களும் விழுப்புரம் நோக்கி பஸ் வரும்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த மாணவி சக பயணிகள் உதவியுடன் அந்த வாலிபர்களிடம் தகராறு ஈடுபட்டார். இதனிடையே மாணவியின் உறவினர்கள் 10 பேர் இருசக்கர வாகனங்களில் விழுப்புரம் முத்தம்பாளையம் புறவழிச் சாலை அருகில் அந்த பஸ்சை எதிர்நோக்கி தயாராக காத்திருந்தனர்.

ஆம்னி பஸ்சை பார்த்ததும் மாணவியின் உறவினர்கள் அதனை வழிமறித்து நிறுத்தம் முயன்றனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றார். உடனே ஆத்திரம் அடைந்த மாணவின் உறவினர்கள் பிடாகத்தில் உள்ள உறவினர்களை தொடர்புகொண்டு குறிப்பிட்ட பாதை நிறுத்துமாறு கூறிவிட்டு அந்த பஸ் அவர்கள் பின் தொடர்ந்து துரைத்துச் சென்றனர். பெட்ரோல் நிலையத்தை கடந்து சென்றபோது அந்த பஸ்சை மாணவியின் உறவினர்கள் வழிமறித்தனர். உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். மாணவி உறுப்பினர்கள் திபுதிபுவென அந்த பஸ்சிற்குள் சென்று டிரைவரை திட்டினார்.

விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையம்

மேலும் பஸ்ஸில் மது போதையில் இருந்த 12 வாலிபர்களுக்கும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த பஸ்ஸை பிடாகத்தில் இருந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு ஓட்டி செல்லுமாறு மாணவியின் உறவினர்கள் வற்புறுத்தியதன் பேரில் அந்த பஸ் நள்ளிரவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள புற காவல் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த வாலிபர்கள் 12 பேரையும் பஸ்ஸிலிருந்து போலீசார் கீழே இறக்கி தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களின் தனக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு பேரில் போலீசரிடம் மாணவி அடையாளம் காண்பித்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் திருநெல்வேலி சந்திப்பு சிந்து பூந்துறையை சேர்ந்த ஷேக் சையத் அலி மகன் முகமது ஆசார் வயது 20, முருகன் மகன் தங்கம் மாரியப்பன் வயது 21 என்பதும் குடிபோதையில் இருந்த அவர்கள் இருவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான இரண்டு வாலிபர்களுடன் வந்த மற்ற 10 பேரும் அங்கிருந்து போலீசார் அனுப்பி கொத்தனார்.

Share This Article
Leave a review