திருவள்ளூர் மாவட்டம் அடுத்த புல்லரம்பாக்கம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருவள்ளூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 12- வகுப்பு படித்து வந்தார் .
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனுஷ் (எ) ஆதி (19) என்பவர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாகச் சிறுமியின் பெற்றோர் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை செய்த பொழுது அதே ஊரைச் சேர்ந்த தனுஷ் (எ) ஆதி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது உறுதியானது , பின்பு காவல்துறை குற்றவாளியை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளி தனுஷ் (எ) ஆதியை ஒருவழியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர், புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு பிணையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலிருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 10-“ஆம்தேதி இரவு சிறுமியின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர். அப்போது சிறுமி வீட்டின் வெளியில் படித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தனுஷ் (எ) ஆதி சிறுமியின் வீட்டின் அருகே வந்து தனது மகளுக்கு ஆசைவார்த்தை கூறி வெளியே அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகச் சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் ஆய்வாளர் (பொறுப்பு ) பத்மஸ்ரீபபி மற்றும் சப் ஆய்வாளர் சுசீலா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தனுஷ் (எ) ஆதி 19 வயது இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் 16 வயது சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர்.