- வட்டிக்கு பணம் வாங்கிய கூலி தொழிலாளி மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட செந்தில்குமார் என்பவரை கைது செய்து பாப்பாநாடு போலீசார் விசாரணை.
தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டு பகுதி கூலி தொழிலாளி வினோத் கடந்த இரண்டு ஆண்டு முன்பு பாப்பாநாடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடனாக வட்டிக்கு பெற்று இருந்தார். ஆனால் நான்கு மாதங்களாக வட்டி பணத்தை வினோத் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வினோத் மனைவி ஜூலியர்வளர்மதி 24 மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது, செந்தில்குமார் வட்டி பணத்தை கேட்டு சென்றார். அப்போது, ஜூலியர் வளர்மதி 5000 ரூபாய்க்கு பணத்தை பெற்றுக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பின்னர் 2500 ரூபாயை தன்னிடம் செலவுக்கு வைத்துக் கொள்ள கொடுத்ததாகவும் ஆனால் அதை தான் வாங்க மறுத்து அழுது கொண்டு உள்ளார் இதனை பார்த்த அவரது கணவர் சம்பவத்தைக் கேட்டு பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இது தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவம் உறுதியானது. இதையடுத்து செந்தில்குமார் மீது கந்துவட்டி, பெண்ணை மனபங்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.