- விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்தார் பவித்ரா ஜனனி. இந்த தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றார். வெற்றி, மலர் என இவர்களின் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது.
தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வந்தார். வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவர் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது சீரியல் முடிந்த நிலையில் அடுத்த சீரியலுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.தேடுதலின் பலனாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழிச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/opposition-parties-insist-on-conducting-population-census-the-central-government-has-not-said-anything-about-it/
அந்த வாய்ப்பை தவற விடாமல் பிடித்துக்கொண்டார் பவித்திரா. வீட்டுக்குள்ளே இருந்தாலும் அவரது போட்டோஷூட்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் தற்போது இவர் தாவணியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.