செந்தில் பாலாஜியை AIIMS மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்: நாராயணன் திருப்பதி கோரிக்கை

1 Min Read
நாராயணன் திருப்பதி

செந்தில் பாலாஜியை AIIMS மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி ஏற்பட்டு முதலில் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியூட்டி கூடிய வருத்தத்தையும், வியப்பையும் அளிக்கிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்நிலையில் நேற்று (ஜூலை 22) முதன்மை நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு நேரில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பலமுறை நம் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் தொடர்ந்து செந்தில்பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி வருவது கவலையளிக்கிறது. அதனால் தமிழக முதல்வர் அவர் மீது கருணை கொண்டு உடனடியாக டில்லி AIIMS மருத்துவமனையில் அனுமதித்து செந்தில்பாலாஜியின் உடல்நலம் காக்க வேண்டும். ஒரு வேளை, அவ்வளவு தூரம் பயணிக்க முடியாதென்றால், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலாவது அவரை அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் அவரின் ‘சேவை’ இந்த நாட்டிற்கு ‘தேவை’ என்பதை முதல்வர் புரிந்து கொண்டு அவரை கனிவோடு AIIMS மருத்துவமணையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This Article
Leave a review