அ.தி.மு.க.வை போல பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள்-அமைச்சர் உதயநிதி

0
91
அமைச்சர் உதயநிதி

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதியில் நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர். கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆகியோர் கல்ந்து கொண்டனர்.

நிகழ்வில் அமைச்சர் உதயநிதி பேசும் போது கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என்கிற திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்துக்கு எதிராக சிலர் திட்டமிட்டு வீண் வதந்தியை பரப்புகிறார்கள். அதை யாரும் நம்பாதீர்கள். இது உங்களுக்கான திட்டம், மகளிர் வாழ்வில் ஒளியேற்ற வந்த திட்டம். கடந்த 26 மாதங்களில் 260-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.

2 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்குரிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி சாதனை செய்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடி மதிப்பில் விரைவில் அமைய உள்ளது. அதற்கான இடம் கண்டறியப்பட்டு முதற்கட்ட பணியை தொடங்கி உள்ளோம். மேலும் வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு ரூ.7½ கோடி செலவில் புதிய தாலுகாவை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன். என்று பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

தி.மு.க. சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாடூரில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் பணம் முடிப்புவுடன் கூடிய பொற்கிழியை வழங்கி பேசினார்.

அப்போது அமைச்சர் உதயநிதி பேசுகையில், நான் இன்று எத்தனையோ நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி என்பது கூடுதல் சிறப்பாகும். இதை எண்ணி நான் பெருமை அடைகிறேன். பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்புங்கள் எப்படியாவது குறுக்கு வழியில் உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எப்போதுமே தமிழ்நாட்டு மக்கள், தமிழகத்தில் பா.ஜ.க. காலடி எடுத்து வைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது உங்களின் வாயிலாக எனக்கு தெரிகிறது.

2021 தேர்தலில் அ.தி.மு.க.வை எப்படி வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்களோ, அதேபோல் பா.ஜ.க.வையும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த நிகழ்ச்சியை பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியாக நான் பார்க்கவில்லை. ஒரு பேரன் தாத்தா பாட்டிக்கு செய்கிற கடமையாகத்தான் இதை பார்க்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here