அரசுப் பள்ளியில் இரண்டாவது படிக்கும் மாணவி வகுப்பறையிலேயே உடல் நலக்கோளாறுகாரணமாக வாந்தி எடுத்துள்ளார்.அந்த மாணவி வாந்தி எடுத்ததை பள்ளி உதவியாளர் சுத்தம் செய்யாமல் பெற்றோர் வரும் வரை காக்க வைத்து பெற்றோரை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த அருள். இவரின் இரண்டாவது மகள் யர்ஷிதா(7) ஏகாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

தினந்தோறும் பணிக்கு செல்லும் அருள் மற்றும் இவரின் மனைவி பள்ளியில் மகளை விட்டு விட்டு பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலையில் பணிக்கு செல்லும் பொழுது குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு பணிக்கு சென்றுள்ளனர்.
காலையில் உணவு உபாதை காரணமாக அருளின் மகள் யர்ஷிதா வகுப்பறையிலேயே வாந்தி எடுத்துள்ளார். பள்ளியில் ஆசிரியர்கள் உதவியாளரை கொண்டு சுத்தம் செய்யாமல் யர்ஷிதா பெற்றோருக்கு தகவல் தெரிவித்து சுமார் 2 மணி நேரமாக யர்ஷிதாவின் பெற்றோர்கள் வரும் வரை குழந்தையை காக்க வைத்து உள்ளனர்.

அருள் மற்றும் அவர் மனைவி பள்ளிக்கு வந்ததும் ஹர்ஷிதா வகுப்பறிவிலேயே வாந்தி எடுத்ததை சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி குழந்தை வாந்தி எடுத்ததை அமர்ந்திருந்த பாய் மற்றும் இடத்தை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து பெற்றோர்கள் சென்றனர்.
ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வேலைக்கு சென்று விட்டு அரசு பள்ளியில் பயில அனுப்பி சுத்தம் செய்வதற்கு உதவியாளர்கள் இருந்தும் பெற்றோர்களை வர வைத்து சுத்தம் செய்த சம்பவம் பெரும் மன உளைச்சலை உண்டாக்கியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.பள்ளி உதவியாளர்கள் குறைந்த பட்சம் மனிதாபிமானம் இல்லாமல் செயல்படும் இந்த செயல் கண்டனத்திற்கு உரியது என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இது போன்ற செயல்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்ககூடாது என்கின்றனர் பெற்றோர்.