விவசாயிக்கு அரிவாள் வெட்டு.

2 Min Read
காண்டீபன்

முன் விரோதம் காரணமாக மர்ம நபர்களுடன் சேர்ந்து வாலிபர் செய்த வெறிச் செயல்.தலையில் வெட்டு காயங்களுடன் விழுந்து தலையில் அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு, அப்போது அந்த விவசாயி காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டார். அன்கிருந்து தப்பியோடிய நபர்களை காஞ்சிபுரம் மாவட்டம் தாலுகா போலீசார் வலைவீச்சு.

- Advertisement -
Ad imageAd image
காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவாக்கம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் காண்டீபன் (37). விவசாயியான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெகன் என்பவருக்குமிடையே முன்பகை இருந்து வந்தாக சொல்லப்படுகிறது.இருவருக்கும் இடையில் வாக்குவாதத்தில் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் காண்டீபன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடல் பகுதியின் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கிட சென்ற நிலையில், அவரை பின் தொடர்ந்து வந்த ஜெகன் மற்றும் அவனுடன் வந்த மர்ம நபர்கள், திடீரென கண் இமைக்கும் நேரத்தில் காண்டீபனை கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு,அங்கிருந்து ஜெகன் மற்றும் அவனுடன் வந்த மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.இதில் தலை மற்றும் கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சரிந்த காண்டீபனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சகிச்சைக்காக அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனையடுத்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகளை அளித்தார்கள்.

காண்டீபன்

மேலும் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வந்த காஞ்சி தாலுகா போலீசார், இது குறித்து காண்டீபனிடம் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய ஜெகன் மற்றும் அவனுடன் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்களை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.ஏற்கனவே ஜெகன் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும்,தொடர்ந்து ஜெகன் இது போன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடதக்கவை.

விவசாயி ஒருவர் அரசு மதுபான கடை அருகே வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review