பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது.

1 Min Read
பள்ளி முதல்வர்

விழுப்புரம் அருகே தனியார் பள்ளி முதல்வர் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு. தலை மறைவான பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

- Advertisement -
Ad imageAd image
கார்த்திகேயன்

விழுப்புரம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் முதல்வராக இருக்கும் கார்த்திகேயன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாணவிகள் இது தொடர்பாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்த போது பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்வர் கார்த்திகேயன் மீது புகார் அளித்தனர் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை தேடி வந்தனர்.

கைதுக்கு அஞ்சி பள்ளி முதல்வர் கார்த்திகேயன் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் தலைமறைவாகி இருந்த பள்ளி முதல்வர் கார்த்திகேயனை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி ஹர்மிஸ் உத்தரவிட்டார்.

பள்ளி முதல்வர்

பள்ளியின் முதல்வர் கார்த்திகேயனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டு சிறையில அடைத்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

கைதான பள்ளி முதல்வரிடம் வேறு எந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது என்று கோணத்திலும் விழுப்புரம் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review